போலி கணக்குகளைத் தொடங்கி பணத்தை மடைமாற்றி மோசடி: வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்து சூதாட்டம்

தபால்நிலையத்துக்கு வரும் மணி ஆர்டெர்களை திருடி பணம் பார்க்கும் செந்தில்-கவுண்டமணி சினிமா காமடி போல் ஒரு சம்பவம் மத்திய பிரேதேசத்தில் நடந்துள்ளது வாடிக்கையாளர்களின் 1 கோடி ரூபாய் பணத்தை திருடி ஐ.பி.எல் சூதாடி தோற்றுள்ளார் போஸ்ட்மாஸ்டர், இரண்டு ஆண்டுகளாக  திருடி வந்தவர் தீடீரென்று சிக்கியது எப்படி, மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டதிற்கு உட்பட்ட பின்னவில் துன்னை தபால் நிலையம் இயங்கி வருகிறது.

 இந்த தபால் நிலையத்தில் போஸ்ட்மாஸ்டராக  பணியாற்றி வந்தவர் விஷால் அயர்வ சுற்றுவட்டார கிராமத்திலுள்ள ஏராளமானோர்  சிறுசேமிப்பு கணக்குகளை தொடங்கி தங்கள் சேமிப்புகளை அந்த தபால் நிலையத்தில் சிறுகச்சிறுக சேர்த்து வந்துள்ளனர், இந்நிலையில்  வாடிக்கையாளர்கள் கட்டும் பணத்தை முறையாக வரவு வைப்பதில்லை, கணவர் இறந்த நிலையில் பணத்தை எடுக்க சென்ற மனைவிக்கு பணம் கிடைக்கவில்லை, இதே போல்  பல புகார்கள் வந்தன இதையடுத்து தபால் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது சிறுசேமிப்பு கணக்குகளின் சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கையாடல்கள் செய்யபட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

 இதையடுத்து அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தபால் நிலையத்தில் போஸ்ட்மாஸ்டரக பணியாற்றி வந்த விஷால் அயர்வாவை கைது செய்து போலீசார் விசாரித்தனர், விசாரணையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக   வாடிக்கையாளர்களின் சிறுசேமிப்பு  கணக்குகளின் இருந்து பணத்தை திருடியது புதிதாக கணக்கு தொடங்குபவரின் கணக்குளை முறைகேடாக பணத்தை வரவு வைக்காமல் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

 போலியான அடையாள அட்டைகள் மூலம் தொடங்கிய கணக்குகளை வைத்து பணத்தை மடைமாற்றியதும் கண்டு பிடிக்கப்பட்டது  இதையடுத்து கையாடல்  செய்த பணம் குறித்து போலீசார் விசாரித்தபோது அந்த பணத்தை ஐ.பி.எல் சூதாட்டத்தில் கட்டி இழந்துவிட்டதாக கூறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளார், இதையடுத்து போஸ்ட்மாஸ்டரிடம்  தொடர்ந்து போலீசார் விசாரித்து வரும்நிலையில் பாதிக்கப்பட்ட 24 பேருக்கு அவர்களின் சேமிப்பு பணத்தை திருப்பி அளிக்கும் நடவடிக்கைகளில் போஸ்ட் ஆபீஸ் நிர்வாகம் இறங்கியுள்ளது. 

Related Stories: