கடல் பாசி சேகரிக்கச்சென்ற பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு: கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர்கள் ராமேஸ்வரத்தில் சாலை மறியல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கடல் பாசி சேகரிக்கச்சென்ற 45-ந்து வயது பெண் கூட்டுப்பாலியல்  வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டுப்பாலியல்  வன்கொமை  செய்துவிட்டு தடையங்களை மறைப்பதற்காக குற்றவாளிகள் தீயிட்டு எரித்து கொன்றுள்ளனர்.

 கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடுபத்தினார்க்கு 1 கோடிரூபாய் நிவாரணம் தொகை வழங்க வேண்டும் என்றும் அவரது மூன்று மகள்களில் யாரென்னும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் உறவினர்கள் மற்றும்  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து வாக்குறுதி அழிக்கும் வரை மறியல் போரட்டத்தை கைவிட போவதில்லை என்று பெண்ணின் உறவினர்கள் கூறியுள்ளனர். ராமேஸ்வரம் அருகே கடல் பாசி சேகரிக்க செல்லும் பொது அந்த பெண்ணை  இறால் பண்ணையில் ஒன்றில் வேலை செய்யும் 6 ஒடிசா இளைஞர்கள் கிண்டல் செய்து வந்துள்ளதாகவும் நேற்று அவரை கூட்டுப்பாலியல் பலகாரம் செய்து எரித்து கொன்றுள்ளனர் என்பதும் குற்றசாட்டாகும்,

 அங்கே சென்ற உறவினர்கள்  இறால் பண்ணையை சூறையாடினர்  ஒடிசா இளைஞர்கள்  6 பேர் மிதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர் அவர்களின் வாகனகளையும் தீயிட்டு கொழுத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று 6 ஒடிசா மாநில இளைஞர்களை மிட்டு ராமேஸ்வரம் நகர காவல்நிலைய போலீசார் விசாரணைக்காக  அலைத்து சென்றுள்ளனர் தற்போது கொலைவழக்கு பதிவுசெய்யபட்டுதுள்ள நிலைய்யில் ஒடிசா இளைஞர்கள் 6 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் கொல்லபட்ட  பெண்ணின் உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கூறாய்வு  செய்யபட உள்ளது அதன் பின்னரே அவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டர என்று தெரியவரும்.

Related Stories: