ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பால் கச்சா எண்ணெய் வயலில் பரவியது

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடுத்த மேல கண்டமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி சார்பில் பிளாண்ட் அமைத்து கச்சா எண்ணெய் மற்றும் காஸ் எடுக்கும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அங்கிருந்து நல்லூரில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுக்கப்படும் கச்சா எண்ணெய், காஸ் அனுப்புவதற்காக கமலாபுரம் வழியாக பூமிக்கடியில் சுமார் 6 அடி ஆழத்தில் குழாய் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கமலாபுரத்தில் ஒரு வயலின் அடியில் புதைக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் மற்றும் காஸ் வெளியேறி நிலத்தில் பரவியது.  தகவல் அறிந்து வருவாய் துறை மற்றும் ஓஎன்ஜிசி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து குழாய் வெடிப்பை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்குவதாகவும், சேதமடைந்த வயல்களை சீரமைத்து தருவதாகவும் ஓஎன்ஜிசி அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து உடைந்த கச்சா எண்ணெய் குழாயை சீரமைக்கும் பணிகளில் ஓஎன்ஜிசி பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: