தீபாவளி சீட்டு நடத்தி ரூ.28 லட்சம் மோசடி: பெண் கைது

பெரம்பூர்:பிராட்வே பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராணி (42). இவர், கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் வள்ளுவர் தெருவை சேர்ந்த நந்தகுமார் (49), அவரது மனைவி சாந்தி (40), ஆகியோரிடம் 2019ம் ஆண்டு தீபாவளி சீட்டு கட்டியுள்ளார். மேலும், தனது நண்பர்களான ஜெயந்தி, மல்லிகா, முனியம்மாள், பொம்மி உள்ளிட்ட 140 பேர், ரூ.28 லட்சம் வரை நந்தகுமார் மற்றும் அவரது மனைவி சாந்தியிடம் சீட்டு கட்டி வந்துள்ளனர்.

ஆனால், சீட்டு முதிர்வு தொகையை திருப்பி கொடுக்காமல் தம்பதி ஏமாற்றி வந்துள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.a இதையடுத்து பண மோசடி செய்த தம்பதி மீது வழக்கு பதிய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், கொடுங்கையூர் போலீசார், மோசடி தம்பதி மீது வழக்கு பதிவு செய்தனர். இதில், நந்தகுமார் முன்ஜாமீன் பெற்று விட்டார். தலைமறைவாக இருந்த சாந்தியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Related Stories: