மேட்டுப்பாளையத்தில் பரிதாபம் முதுகலை நீட் தேர்வு பயத்தில் பெண் டாக்டர் தற்கொலை: காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் நடந்த சோகம்

மேட்டுப்பாளையம், மே 21:கோவை மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காட்டூரை சேர்ந்த பெண் டாக்டர் செந்தாமரை. இவரது கணவர் ரங்கராஜ். இவர்கள் அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வருகிறார்கள். இந்த தம்பதிக்கு ராசி (26) என்ற மகள் இருந்தார். அவர் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு பெற்றோர் நடத்தி வரும் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றினார். ராசியும், அதே பகுதியை சேர்ந்த அபிஷேக் (27)  என்பவரும் காதலித்து வந்தனர். அபிஷேக் கோபியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

காதலுக்கு பெற்றோர் சம்மதித்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம்  நடந்தது. புராசி மருத்துவ மேல் படிப்பான எம்டி படிக்க முடிவு செய்தார். இதற்கான முதுகலை நீட் தேர்வுக்கு தயாராக ராசி கடந்த 3 மாதத்திற்கு முன் பெற்றோர் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வெகுநேரமாகியும் ராசியின் அறை திறப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் ராசியின் அறைக்கு சென்று பார்த்தனர்.

அங்கு ராசி தூக்கில் சடலமாக தொங்கிக்கொண்டிருந்தார்.கடந்த 15 நாட்களாக நீட் தேர்வுக்கு இரவு, பகலாக தயாராகி வந்தார்.  இதனால்  ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Related Stories: