வைகோவுடன் பேரறிவாளன் சந்திப்பு

சென்னை:  முன்னாள்  பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து  வந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து  முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள்  பேரறிவாளனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அவர், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் நேற்று  மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சென்னை அண்ணா நகரில்  உள்ள அவரது இல்லத்தில் பேரறிவாளன் சந்தித்தார்.

அப்போது, பேரறிவாளன்,  வைகோவுக்கு நன்றி தெரிவித்தார்.  இந்த சந்திப்பின் போது, பேரறிவாளன் தாயார்  அற்புதம்மாள், மதிமுக தலைமை கழக செயலாளர் துரைவைகோ, மாவட்ட செயலாளர் கழககுமார் உள்ளிட்ட பலர் உடன்  இருந்தனர். இந்த சந்திப்பிற்கு பிறகு வைகோ கூறுகையில், ‘‘பேரறிவாளனின்இளமை காலம், வசந்த காலம் எல்லாம் அழிந்து விட்டது. அவரது தயார் அற்புதம்மாள் மிகப்பெரிய விராங்கனையாக இருந்து போராடி விடுதலை பெற்று தந்துள்ளார்’’ என்றார்.

இதன் பின் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை பேரறிவாளன் சந்தித்தார். முன்னதாக நேற்றுமுன்தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியையும் அவர் சந்தித்திருந்தார்.

Related Stories: