மீண்டும் தெலுங்கு படம் இயக்கும் சமுத்திரகனி

சென்னை: இயக்குனராக அறிமுமான சமுத்திரகனி பார்த்தாலே பரவசம், நிறைஞ்ச மனசு, நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் நடிகரான அவர், தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் அவர் இயக்கிய நாடோடிகள், நிமிர்ந்து நில் படங்களை தெலுங்கிலும் இயக்கினார். தற்போது 7 வருட இடைவெளிக்கு பிறகு தெலுங்கு படம் ஒன்றை இயக்குகிறார். இதில் பவன் கல்யாண் நடிக்கிறார். இது சமுத்திரகனி கடைசியாக இயக்கிய வினோதய சித்தம் என்ற தமிழ் படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. ‘‘நான் பவன் கல்யாணின் ரசிகன் என்பதால் அதை மனதில் வைத்து அவர் நடிக்கும் படத்தை இயக்குவேன்” என்று சமுத்திரகனி கூறியிருக்கிறார்.

Related Stories: