தமிழகத்தில் தென்காசி, திருச்சி, நீலகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை: தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வாயிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வளிமண்டல கிழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், உள்பட 17 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்.

சேலம், ஈரோடு, நாமக்கல், கோவை, திருச்சி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மே 18-ல் கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் 20ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: