இசைக்கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் முதலிடம் பெற்ற 5 பேர் மாநில கலைப்போட்டிக்கு தேர்வு

சென்னை: தமிழக கலை பண்பாட்டுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து ஊக்குவிக்க 5 பிரிவுகளில் சென்னை அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் இசைக்கல்லூரியில் நடைபெற்ற குரலிசைப்போட்டியில் முதல் பரிசு ஸ்ரீ  ஸ்வராத்மிகா, 2ம் பரிசு வி.முகுந்த சாய், 3ம் பரிசு நா.ரித்திக்கேஷ்வர், கருவியிசை போட்டியில் முதல் பரிசு பி. வெண்ணிலா(வயலின்), 2ம் பரிசு கா.கார்த்திக் பாலாஜி(மிருதங்கம்), 3ம் பரிசு கி.லவ் அய்யங்கார்(புல்லாங்குழல்), பரதநாட்டியம் போட்டியில் முதல் பரிசு எஸ். சஹானா, 2ம் பரிசு ப.கிருஷ்ணப்பரியா, 3ம் பரிசு பி.ஸ்ருதி, கிராமிய கலை போட்டியில் முதலாம் பரிசு நா.ராஜன்(கரகம் தப்பாட்டம்), 2ம் பரிசு சு.வி. ரமணன்(கரகம்), 3ம் பரிசு தமிழ்செல்வன்(பறை) ஆகியோர் பெற்றனர். இப்போட்டியில் முதலாம் பரிசு கு.பவித்ரா, 2ம் பரிசு சி.கார்திக் ராஜா, 3ம் பரிசு ஷாரணி ஆகியோர் பெற்றனர். இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.6,000, 2ம் பரிசு ரூ.4,500, 3ம் பரிசு ரூ.3,500 வழங்கப்படுகிறது. இப்போட்டியில் முதலிடம் பெற்ற ஐந்து இளைஞர்கள் மாநில கலைப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: