அரவக்குறிச்சி பேரூராட்சியில் கோடைகால வறட்சியை சமாளிக்க தீவிர நடவடிக்கை

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி பேரூராட்சியில் கோடை காலத்தில் குடிநீர் வறட்சியை சமாளிக்க தடையில்லாமல் குடிநீர் கிடைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. அரவக்குறிச்சி பேரூராட்சியில் கோடை வறட்சியின் காரணமாக ஆழ் துளை கிணறுகள் மற்றும் விவசாயக் கிணறுகள் அனைத்தும் வற்றி விட்டன. இதனால் வீடுகளில் உள்ள ஆழ்குழாய் நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு போய் விட்டது.

மாதம் ஒரு முறை மட்டுமே வீடுகளுக்கு குடி நீர் விநியோகிக்கப்பட்டது. அதுவும் போதுமான அளவு இல்லாத நிலை இருந்தது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ளதால், மழை பொழிவு குறைவின் காரணமாகவும் இந்த ஆண்டும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அரவக்குறிச்சி பேரூராட்சி நீராதாரங்களை மேம்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தெருக்களில் உள்ள பிளாஸ்டிக் தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்பும் ஆழ்குழாய் கிணறுகளின் ஆழத்தை அதிகப்படுத்தியும், அதிலுள்ள பைப்புகளின் நீளத்தை அதிகப்படுத்தியும், பழுதடைந்த மின் மோட்டர்களை சரி செய்தும், பொதுமக்களுக்கு தடையில்லமல் இந்த கோடையில் போதுமான தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தெருக்களில் உள்ள பிளாஸ்டிக் தொட்டிகளை கண்காணித்து தண்ணீர் வீணாகாமல் திருகுகள் ஒழுகாமல் சரியான முறையில் உள்ளதா என்று கண்டறிந்து அதனை சீரமைக்கப்படுகின்றது. இவ்வாறாக கத்திரி வெயில் ஆரம்பித்து வட்ட நிலையில் சென்ற ஆண்டுகளைப் போல பொதுமக்களை குடிநீருக்கு அலைய வைக்காமல் வறட்சியை சமாளிக்க முன்னெச்சரிக்கையாக நீராதாரங்களை கண்காணித்து மேம்படுத்த, அக்கினி நட்சத்திரம் ஆரம்பித்து விட்ட நிலையில் கோடைகால குடிநீர் வறட்சியை சமாளிக்க அரவக்குறிச்சி பேரூராட்சியில் தடையில்லாமல் குடிநீர் கிடைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பேரூராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: