திருவள்ளூர் கலெக்டர் தகவல் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்கல், முகவரி மாற்ற சிறப்பு முகாம்: இன்று நடக்கிறது

திருவள்ளூர்: குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று நடக்கிறது. அதன்படி, திருவள்ளூர் வட்டம் சிறுகளத்தூர் நியாய விலை கடை அருகில், ஊத்துக்கோட்டை வட்டம் பென்னலூர்பேட்டை கிராம அலுவலர் அலுவலகம், பூந்தமல்லி வட்டம் நேமம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், திருத்தணி வட்டம் பெரிய கடம்பூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், பள்ளிப்பட்டு வட்டம் பள்ளிப்பட்டு வருவாய் ஆய்வாளர் அலுவலகம், பொன்னேரி வட்டம் கூடுவாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், கும்மிடிப்பூண்டி வட்டம் சுண்ணாம்புகுளம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஆவடி வட்டம் நெமிலிச்சேரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஆர்.கே.பேட்டை வட்டம் சமத்துவபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: