பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் நவீன தொழில்நுட்பத்துடன் 1,152 அடுக்குமாடி குடியிருப்புகள்: நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தகவல்

சென்னை: பெரும்பாக்கம் திட்டப் பகுதியில் ₹116.37 கோடியில் 1152 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ் பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் ₹116.37 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 1152 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது தொடர்பாக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கை: பெரும்பாக்கம் திட்டப் பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த பணிகள் ₹116.37 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டுருவாக்க கான்கிரீட் கட்டுமான தொழில்நுட்ப முறையினை கடைபிடித்து கட்ட கட்டுமான நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

தற்போது இக்கட்டுமான பணிகள் அனைத்து விதத்திலும் முடிவுற்று, திட்டப் பகுதிகளில் உள்சாலைகள், மின்விளக்குகள், மின்சார இணைப்பு, குடிநீர் வழங்கல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், அங்கன்வாடி, சிறு கடைகள், நியாயவிலை கடைகள், நூலகம், பாலகம். திடக்கழிவு மேலாண்மை போன்ற கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்ட பயனாளிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான பணிகள் முடிவுற்று குடிநீர் சோதனை பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்திற்காக தனியாக ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. குடியிருப்பிற்கான மின்சார இணைப்பு பணிகள் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகள் வருகிற 16ம் தேதி நிறைவு பெறும்.

Related Stories: