தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் ராஜ்ய சபா எம்பியாகிறார் நடிகர் பிரகாஷ் ராஜ்? முதல்வருடன் திடீர் சந்திப்பால் பரபரப்பு

ஐதராபாத்: தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் ெதலங்கானா மாநிலத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலங்கானாவில் மொத்தமுள்ள ஏழு ராஜ்யசபா எம்பி பதவிகளும் ஆளும்  தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியிடம் உள்ளன. எம்பிக்கள் வோடிடெலா  லட்சுமிகாந்த ராவ் மற்றும் தருமபுரி நிவாஸ் ஆகியோர் ஜூன் 21ம்  தேதி ஓய்வு பெறுவதால், மாநிலத்தில் இரண்டு எம்பி பதவிகள் காலியாக உள்ளன.  இந்நிலையில் தேர்தல் ஆணையம் நேற்று ெவளியிட்ட அறிவிப்பின்படி ெதலங்கானாவில்  இரு இடங்களுக்கான எம்பி தேர்தல் வரும் ஜூன் 10ம் தேதி நடைபெற உள்ளது.

ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி மற்றும் பாஜக இடையே 2 எம்பி பதவிகள் யார் யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக தென்னிந்திய திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும், முதல்வருமான கே.சந்திரசேகர ராவை கடந்த ஓரிரு நாட்களுக்கு முன், அவரது எர்ரவல்லி பண்ணை வீட்டில் சந்தித்துப் பேசினார். அதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் பிரகாஷ் ராஜ், முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்தார்.  

அதனால் பிரகாஷ் ராஜ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் மனுதாக்கல் செய்யலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. அதேபோல், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமியின் பெயரும் தெலங்கானாவில் அடிபடுகிறது. இவர் பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. சட்டசபையில் தற்போதுள்ள பலத்தின்படி, ஆளும் கட்சி போட்டியின்றி 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் பலம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: