அண்ணாநகர்: அண்ணாநகர் எச்.பிளாக் பகுதியில் பிரபல நடிகை மும்தாஜ் வசித்து வருகிறார். இவரது வீட்டிலிருந்து நேற்று முன்தினம் 17 வயது சிறுமி தப்பித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாள். அதன்படி, அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியை மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், பிரபல நடிகை மும்தாஜ் வீட்டில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக வடமாநிலத்தை சேர்ந்த சிறுமி தனது அக்காவான 19 வயது பெண்ணுடன் வேலை செய்து வந்தாள். அப்போது, இருவரையும் சித்ரவதை செய்து வந்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் மீட்டு சென்னையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.