சென்னை: அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் G அல்லது அ என்ற எழுத்துக்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், அரசு வாகனம் அல்லாத வாகனங்களில் தற்பொழுது தமிழகமெங்கும் பதிவெண் பலகையில் (Number Plate) G அல்லது அ என்ற எழத்துக்கள் எழுதப்பட்டோ அல்லது Sticker ஒட்டப்பட்டோ மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகன சட்டம் 3 உட்பிரிவு (K) -ன் படி அரசு வாகனம் என்றால் தமிழக அரசின் வாகனங்கள் மட்டுமே. அரசு வாகனங்களுக்கு வரி விலக்கு மற்றும் காப்பு சான்று விலக்கு உள்ளது.