புகையிலை பயன்பாடு குறைகிறது...

நன்றி குங்குமம் டாக்டர்

மகிழ்ச்சி

புற்றுநோயை உண்டாக்கும் முதன்மையான காரணியாக இருப்பது புகையிலை பயன்பாடுதான். எனவே அரசாங்கமும், தனியார் தன்னார்வ அமைப்புகளும், பிரபலங்களும் சர்வதேச அளவில் தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வந்தன. அதற்கு பலனாக புகையிலை பயன்பாடு குறைந்திருப்பதாக ஆய்வில் தெரிய  வந்துள்ளது.

‘ஒவ்வோர் ஆண்டும் 8 மில்லியன் மக்கள் புகைக்கு அடிமையாகி இறந்துள்ளனர்’ என்று தரவுகள் கூறுகிறது. அதேபோல் 7 மில்லியன் மக்கள் நேரடியாகவும் 1.2 மில்லியன் மக்கள் மறைமுகமாகவும் இந்த புகையிலைக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவாகி உள்ளது.

இத்தகைய சூழலில் புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை 19 வருடங்கள் கழித்து தற்போது குறைந்துள்ளது. 2000-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் 60 மில்லியன் மக்களின் புகையிலை பயன்பாடு குறைந்துள்ளது என உலக சுகாதார நிறுவன அறிக்கை கூறுகிறது.

அதாவது 2000-ம் ஆண்டில் 1.397 பில்லியன் என்றும் 2018-ம் ஆண்டு 1.337 பில்லியன் என தெரிவித்துள்ளது. சிகரெட், பைப்ஸ், சுருட்டு, புகையில்லா புகையிலை, பீடி ஆகியவை இதற்கென ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆய்வில் புகையில்லாத நவீன இ- சிகரெட்டுகளை பயன்படுத்துவோர் குறித்த புள்ளி விவரங்கள் இடம் பெறவில்ைல.

எனினும் புகைப்பிடிப்போரின் உயிர்களைக் காப்பாற்ற, ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், புகையிலையை வெல்லவும் சர்வதேச சமூகம் எடுத்த முயற்சியே இதற்கு காரணம் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. புகையிைலயை பயன்படுத்தும் விகிதாச்சாரம் இதே அளவில் தொடர்ந்து குறையுமேயானால் இன்னும் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைய முடியும். புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வும், நம் முயற்சிகளும்
தொடரட்டும்!

- இதயா

Tags : Tobacco use ,
× RELATED புகையிலை பயன்பாட்டை...