ஆண்டு விற்பனை ரூ.1.50 கோடிக்கு மேல் இருந்தால் தெரிவிக்க வேண்டும்: வணிகவரித்துறை எச்சரிக்கை

சென்னை: ரூ.1.50 கோடிக்கு மேல் இருந்தால் வணிகர்கள் 7 நாட்களுக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று வணிகவரித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வணிகவரித்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: ரூ .1.50 கோடிக்கு மேலிருந்தாலோ அத்தகைய வரி செலுத்துவோர் ரூ.1.50 கோடிக்கு மேலிருந்த நாளிலிருந்து 7 நாட்களுக்குள் உரிய வரிவிதிப்பு அலுவலருக்கு, தங்களை சாதாரண வணிகர்களாக கருதக் கோரி சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இணையதளம் முகப்பு மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதனை தொடர்ந்து உரிய வரியினை வசூல் செய்து, ஒவ்வொரு மாதமும் உரிய படிவம் மூலம் அரசுக்கு செலுத்தவேண்டும் . இவ்வாறு செய்யதவறியவர்களின் விவரத்தினை கணினியில் பகுப்பாய்வு செய்ததில் , 2020-21 நிதியாண்டில் ரூ.1.50 கோடிக்கு மேல் ஒட்டுமொத்த விற்றுமுதல் தொகை கொண்ட வரி செலுத்துவோர்களில் , முதற்கட்டமாக, 27 வணிகர்களின் வணிக இடத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்படுகிறது. எனவே, வரி செலுத்தும் வணிகர்கள் தங்களுடைய ஓராண்டிற்கான விற்றுமுதல் ரூ.1.50 கோடியைத் தாண்டும் பட்சத்தில் உடனடியாக கணினிவாயிலாக உரிய அலுவலருக்கு விபரத்தைத் தெரிவித்து வரிவிதிப்பு முறையிலிருந்து சாதாரண வணிகராக மாறி வரி வசூல் செய்து உரிய படிவத்தில் அரசுக்கு செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். தவறும்பட்சத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியினை உரிய அபராதம் மற்றும் வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: