அரசு பஸ்களில் குழந்தைகளுக்கு அரை கட்டணம் விதிகளில் விரைவில் திருத்தம்: மேலாண் இயக்குனர் இளங்கோவன் தகவல்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குனர் இளங்கோவன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக முன்பதிவு செய்யும் முறையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. அவர்களது குழந்தைகளுக்கு முன்பதிவு செய்து பயணிக்கும் நடைமுறை தொடர்ந்து இருக்கும். மேலும், பயணிகள் பயணிக்கும் போது அவர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி தங்களது குழந்தைகளுக்கு இருக்கை பெற்றுக் கொள்ளலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. மேலும் அவ்வாறே தமிழ்நாடு அரசு, அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படும். எனவே, தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன விதிகளில் அரைக்கட்டணம் சம்பந்தமாக, 3 வயது முதல் 12 வயது என்பதற்கு பதிலாக, 5 வயது முதல் 12 வரை உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே அரைக்கட்டணம் வசூலிக்கலாம் என உரிய முறையில் திருத்தங்கள் செய்யப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: