அழிந்துபோன கிரானைட் துறை முதல்வர் ஆட்சியில் மீண்டும் செழிக்கும்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

தமிழக சட்டப் பேரவையில் நேற்று திருமங்கலம் தொகுதி உறுப்பினர் ஆர்.பி. உதயகுமார்(அதிமுக): கிரானைட் தொழிற்சாலைகளில் ஏறத்தாழ ஒரு லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.   எனவே மதுரையில் கிரானைட் தொழிலை தொடங்குவதற்கு அமைச்சரின் கவனத்தை ஈர்க்கிறேன்.

அமைச்சர் துரைமுருகன்: கிராணைட்டுக்காக 2016ம் ஆண்டு அவர்களது ஆட்சியிலிருந்த போது தான் அப்பொழுது அங்கு கலெக்டராக இருந்தவர் சகாயம்.  அவர், 1,13,000 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டார். அத்துடன் அவர் போய்விட்டார். அடுத்த கலெக்டராக அதுல்ய மிஸ்ரா என்பவர் வந்தார். சகாயம் போட்டது சரியில்லையென்று கூறி இவர் 175 குவாரிகளை தணிக்கை செய்ய வேண்டுமென்றார். அந்த குழுவினர் 94 குவாரிகளில் விதிமீறல் இருப்பதாக சொல்லியது. மாவட்ட கலெக்டர் கேட்டுக் கொண்டதற்கிணங்க மறுபடியும் ஒரு உயர்மட்டக் குழு அமைத்தார்கள். கலெக்டரும் ஒரு குழு அமைத்தார்.  அந்தக் குழு 83 குவாரிகளை ஆராய்ந்தது. இப்படி, திருப்பி திருப்பி ஆராய்ந்து கடைசியில் ஒரு வல்லுநர் குழு போட வேண்டும் என்று வைத்து விட்டார்கள். இப்போது என்ன நிலைமை என்று கேட்டீர்களென்றால், குவாரிகளை எடுக்கிறதா, வேண்டாமா என்பதுதான் பிரச்னை.

இப்போது, அரசாங்கத்திற்கு சொந்தமான இடங்களில், குவாரிகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது. அதற்காக ஒரு குழு போட்டு உட்கார்ந்து பார்க்கப் போகிறோம். தனியார் நிலங்களிலும் குவாரிகளை எடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கிறது.  நாங்கள் அறிவித்தோம். அறிவித்த பிறகு 4 பேர்தான் வந்திருக்கிறார்கள். ஆகையினால் 4 பேரை வைத்து செய்ய முடியாது. இன்னும் கொஞ்சநாள் பொறுத்து, எல்லோரும் வந்ததற்கு பிறகு, கனிமவளத்துறை அதிகாரிகள் எல்லாம் போய்விட்டு வர வேண்டுமென்பதற்காக காத்திருக்கிறோம். எனவே, மீண்டும் அழிந்துபோன அந்தத் தொழிற்துறை கலைஞர் ஆட்சியில் இருந்தபடி மீண்டும் முதல்வர் ஆட்சியில் மீண்டும் அதேபோல் செழிக்கும். வேலைவாய்ப்புக் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: