சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல்சார் உயிரினங்கள் குறித்த சிறப்பு அருங்காட்சியகம்-இந்தியாவில் முதன்முறையாக பெரம்பலூரில் அமைகிறது

பெரம்பலுார் : சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த அமோநைட்ஸ் எனப்படும் கடல்சார் உயிரி னங்கள்குறித்த சிறப்பு அரு ங்காட்சியகம் இந்தியாவி லேயேமுதன்முறையாக பெ ரம்பலூரில் அமைகிறது.கடல்சார்உயிரினங்கள் மற் றும் புதைப் படிவங்கள் குறி த்த ஆராய்ச்சியாளர் நிர்ம ல் ராஜ் என்பவர் பல்வேறு நாடுகளில் கண்டுபிடித்த அரியவகை கடல்சார் உயி ரினங்களின் படிவங்கள், எச்சங்களை பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக உரு வாகவுள்ள அரசு அருங் காட்சியகத்தில் வைப்பதற் காக மாவட்டக் கலெக்டர்  வெங்கட பிரியாவிடம் நேற்று (7ம் தேதி) வழங்கினார். இந்நிகழ்வில் சார் ஜா மியூசியம் எஜீகேஷ னல் நிறுவன இயக்குநரும், புதைப்படிவ ஆராய்ச்சி யாளருமான நிர்மல்ராஜ் செய்தியாளர்களிடம் அளி த்தப்பேட்டியில் தெரிவித்த தாவது :

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தனூர் பகுதி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்தது. அப்போது வாழ்ந்து வந்த கடல்வாழ் உயி ரினங்கள், தாவரங்கள், மரங்கள் ஆகியன காலப்போக்கில் புதையுண்டு படிமங்களாகமாறின. புவியியல் ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட போது, இப் படிமங்களின் முக்கியத்துவம் குறித்து உலகிற்குத் தெரியவந்தது. சாத்தனூரில் கல்லுருவாகிய பெரிய அடி மரம் ஏறத்தாழ 10 கோடி ஆ ண்டுகளுக்கு முற்பட்டதாகும். அதுமட்டுமல்லாது சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்துபோ ன கடல்வாழ் உயிரனமான அம்மோநைட்ஸ் எனப்படும் நத்தைபோன்ற தோற்றமுடைய உயிரினங்களின் படிவங்கள் பெரம்பலுார் மாவட்டத்தில் அதிக அளவு கிடைக்கின்றது.

பெ ரம்பலுார் தாலுக்கா அலுவ லக வளாகத்தில் அம்மோ நைட்ஸ் படிவங்களுக்கென் றே பிரத்யேக அருங்காட்சி யகம் அமைப்பது அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைந்தே ன். உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று கடல் சார் உயினங்கள் குறித்தும், புதை படிவங்கள் குறித் தும் ஆராய்ச்சி செய்யும் பணியில் உள்ளநான் என் னிடமுள்ள மடகாஸ்கார் நா ட்டில் சுமார் 10 முதல் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் பு வாழ்ந்த கடல் உயிரினங்களின் (AMMONITES) தலைக்காலி 5படிவங்கள்,

பொலி வியா நாட்டில் 40 முதல் 50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆழ்கடல் பூச்சி வகை எச்சங்கள் (TRILOBIT ES) 1படிவம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் காரை பகுதி யில் 10 கோடி ஆண்டுகளு க்கு முன்பு கண்டுபிடிக்கப் பட்ட கடல் சுராவின் பல் படி வங்கள் போன்றவற்றை பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக உருவாகவுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக மாவட்டக் கலெக்டரிடம் வழங்கியுள்ளேன். இந்தியாவிலேயே அம்மோநைட்ஸ் எனப்படும் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பே அழிந்த கடல்சார் உயிரினத்திற்கென்று பிரத் யேக அருங்காட்சியகம் அமைக்கப்படுவது இதுவே முதன்முறை எனத் தெரிவித்தார்.

Related Stories: