காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு ரூ.17 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே தாழையம்பட்டு கிராமத்தில் துர்க்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலைதத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியது: இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையில் சுமார் 1500 கோயில்களில் ஆயிரம் கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளபடும் என அறிவிக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 80 கோயிலுக்கு ரூ. நூறு கோடி ஒதுக்கீடு செய்து  இந்த ஆண்டு 80 கோயில்களில் திருப்பணி நடைபெறவுள்ளது. குறிப்பாக காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலுக்கு ரூ.17 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்தாயிரம் கோயில்களுக்கு திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகம் செய்யப்படும்.  தர்மபுரி ஆதினம் தொடர்பான கேள்விக்கு ஆண்டு ஆண்டு காலமாக வழக்கத்திற்கேற்ப நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தர்மபுரி ஆதீனம் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்க நல்ல முடிவை முதல்வர் எடுப்பார். மேலும் வரும் ஆண்டுகளில் அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற ஆதீனங்களுடன் கலந்து ஆலோசித்து நல்ல முடிவுகள் எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Related Stories: