தருமபுர ஆதின பட்டின பிரவேச நிகழ்ச்சி விவகாரம் அரசியல் கலப்பு தேவையில்லை: முதல்வர் கூறியதாக மயிலம் ஆதினம் பேட்டி

சென்னை: தருமபுர ஆதின பட்டினபிரவேச நிகழ்ச்சி நடத்த அரசு ஆவன செய்யும் என்றும், அரசியல் கலப்போ, எதுவும் தேவையில்லை. பிறருடைய தலையீடு, குறுக்கீடு தேவையில்லை என்று முதல்வர் கூறியதாக மயிலம் பொம்மபுரம் ஆதினம் கூறினார். சென்னையில் முதல்வரின் முகாம் அலுவலகத்தில் தருமபுரம் ஆதினம் பட்டினபிரவேசம் பிரச்னை தொடர்பாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் குன்றக்குடி ஆதினம், கோவை பேரூராதி தினம், மயிலம் ஆதினங்கள் ஆகியோர் சந்தித்து பேசினர்.

பின்னர் ஆதினங்கள் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது: திமுக ஓராண்டு சாதனை குறித்து வாழ்த்து தெரிவித்தோம். ஆதினம் சார்பாக நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவதற்கும் எந்தவிதமான குறுக்கீடுகளும் இல்லாமல் நல்ல முறையில் நடத்துவதற்குமான ஆவன செய்யுமாறும் கூறியுள்ளனர். இந்த ஆண்டு பட்டினபிரவேசம் சுமுகமாக நடப்பதற்கு முயற்சி மேற்கொண்டு இருக்கிறோம். இதுவரை தடை பெறாமல் நடந்தது. கொரோனா காலத்தில் மட்டுமே நிறுத்தப்பட்டது. ஆதின குருபூஜை என்பது தருமபுரி ஆதினம், திருவாவடுதுறை ஆதினத்திலும் பல்லக்கில் பவனி செல்வது வழக்கமாகவும், மரபாகவும் இருந்து வந்தது. இது மரபு பாரம்பரிய ஆன்மிக அடித்தளத்தில் நடைபெறும் ஒரு நிகழ்வு. அதன் அடிப்படையில் தருமபுர ஆதினத்தார் நடத்துகிறார்கள்.

தருமபுர ஆதினத்தின் சார்பாக தமிழக அரசின் ஓராண்டு நிறைவை மகா சன்னிதானத்தின் உத்தரவு படி அவருடைய வாழ்த்துகளை தெரிவித்தோம். இந்த ஆண்டு பல்லக்கு சிவிலி புறப்பாடு தொடர்பாக ஆதினங்களுடன் இணைந்து கோரிக்கையை முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். முதல்வரும் அனைவரிடம் கலந்து பேசி ஆவன செய்யும்படி கூறியுள்ளார். இதில் அரசியல் கலப்போ, எதுவும் தேவையில்லை, பிறருடைய தலையீடு, குறுக்கீடு தேவையில்லை. இது சமய தொடர்பான நிகழ்வு. ஆகவே வழக்கம்போல் நடை பெறுவதற்கு ஒத்துழைப்பு நல்குவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். முதல்வரும் ஆவன செய்யும்படி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கூறினர்.

Related Stories: