எம்.எல்.ஏ.,க்களின் சம்பள உயர்வு குறித்து முதல்வருடன் பேசி முடிவு: அமைச்சர் துரைமுருகன் தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று பொதுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது உறுப்பினர்களின் கேள்வி போல் நானும் கேள்விகளை கேட்டேன். எனவே, உறுப்பினர்களுடைய சம்பளத்தை உயர்த்தலாம் என்பதில் மாறுபட்ட கருத்து கிடையாது. பென்ஷனை உயர்த்தலாம் என்று கேட்டதிலும் தப்பு இல்லை. கார் கேட்டீர்கள் அதிலும் தப்பு கிடையாது. யாரும் கவலைப்படாதீர்கள். முதல்வருடன் பேசி முடிந்த அளவிற்கு செய்கிறோம். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர்த்தினோம். கொள்கை விளக்கக்குறிப்பு தாமதமாக வருவதாக கூறுகிறார்கள். இது இப்போது இல்லை நான் எப்போது எம்.எல்.ஏ.,வாக இருந்தனோ அப்போதிலிருந்து அப்படி தான் வருகிறது.எனவே, இனிவரும் காலங்களிலாவது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே கொள்கை விளக்கக் குறிப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: