சாயர்புரம் அருகே 2 மாதம் கிடப்பில் போடப்பட்ட தேரி ரோடு-கட்டாலங்குளம் இணைப்பு சாலை பாலம் பணி: பொதுமக்கள் அவதி

ஏரல்: சாயர்புரம் அருகே தேரி ரோடு - கட்டாலங்குளம் இணைப்புச் சாலை மற்றும் பாலம் பணி கிடப்பில் போடப்பட்டதால் ஆகியவற்றை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை- சாயர்புரம் தேரி ரோட்டில் சக்கம்மாள்புரம் விலக்கிலிருந்து‌ கட்டாலங்குளம் செல்லும் ரோடு நீண்டகாலமாக குண்டும் குழியுமாக இருந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2மாதங்களுக்கு முன்பு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் அந்த ரோடு போடுவதற்கான வேலைகள் தொடங்கப்பட்டது. இதுதவிர அந்த ரோட்டில் உள்ள 4 பாலங்களும் புதிதாக கட்டப்பட்டன. பாலம் கட்டும் பணியும், ரோடு போடும் பணியும் அரைகுறையாக முடிந்த நிலையில் அப்படியே கடந்த 2மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த ரோட்டை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையே இருந்து வருகிறது. இந்த ரோடு செல்லும் பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடந்து வருகிறது.

பாலம் மற்றும் ரோடு வேலையும் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். இதில் ஒரு பாலத்திற்கு மட்டும் குழி தோண்டப்பட்ட நிலையில் அப்படியே  போடப்பட்டதால் கால்நடைகள் அதற்குள் விழுந்து உயிரிழக்க நேரிடுகிறது. எனவே ரோட்டையும், பாலங்களையும் உடனடியாக வேலையை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: