நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 6973 பேர் எழுதினர்-317 பேர் ஆப்சென்ட்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொது தேர்வெழுத தகுதி வாய்ந்த 7290 பேரில் 6973 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 317 பேர் தேர்வெழுதவில்லை.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. நேற்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் 3446 மாணவர்கள், 3844 மாணவிகள் என 7290 பேர் தேர்வு எழுத தகுதி வாய்ந்தவர்கள் ஆவர்.

39 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தமிழ் பாட தேர்வினை எழுத தகுதி வாய்ந்த 6736 மாணவ, மாணவியரில் 6426 பேர் தேர்வெழுதினர். 310 பேர் தேர்வு எழுதவில்லை. மலையாள பாடத்தில் 205 பேர் தேர்வெழுதினர். பிரெஞ்ச் பாடத்தில் 275 பேரில் 269 பேர் தேர்வு எழுதினர். 6 பேர் வருகை புரியவில்லை.

இந்தி பாடத்தில் மொத்தம் 74 பேரில் 73 பேர் தேர்வெழுதினர். ஒருவர் வரவில்லை. நீலகிரி மாவட்டத்தில் தேர்வெழுத தகுதி வாய்ந்த 7290 பேரில் 6973 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 317 பேர் தேர்வெழுதவில்லை.

தனித்தேர்வர்களில் தமிழ் தேர்வினை 41 பேர் எழுதினர். 3 பேர் வருைக புரியவில்லை. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சலுகை பெற்றோர் மொத்தம் 27 பேர் ஆவார்கள். இவர்கள் அரசு தேர்வுத்துறையால் வழங்கப்படும் கூடுதல் ஒரு மணிநேரம், சொல்வதை எழுதுபவர், மொழிப்பாட விலக்கு போன்ற சலுகைகளை பெற்று தேர்வு எழுதியுள்ளனர்.

மாவட்ட கலெக்டர் அம்ரித் ஊட்டி புனித சூசையப்பர் மேல்நிலை பள்ளியில் நடந்த தேர்வினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வில் பள்ளி மாணவர்கள் காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. பறக்கும் படையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்கள் நடக்காமல் தவிர்க்கும் வகையில் தேர்வு மைய வளாத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories: