பாளை அருகே கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பற்ற முறையில் நெல் வைப்பு

கேடிசி நகர்: பாளை அருகே அரியகுளத்தில் கொள்முதல் நிலையத்தில் பாதுகாப்பாற்ற முறையில் நெல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மழை, வெயிலால் நெல் சிதிலமடைந்து போய் விடுமோ என்று திண்டாடி வருகின்றனர். பாளை அருகே அரியகுளத்தில் நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. அந்தப் பகுதி வயல்களில் அறுவடையாகும் நெல்லை, விவசாயிகள் இந்த கொள்முதல் நிலையத்தில் ஒப்படைக்கின்றனர். இவ்வாறு விவசாயிகள் வழங்கும் நெல், அங்கு திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளது.  இதனால் அந்த நெல் கோடை மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், ஒன்றுக்கும் உதவாததாக மாறியுள்ளன.

ஆடு, மாடுகளும் அவ்வப்போது மேய்ந்து வருகின்றன. மேலும் நெல் கொள்முதல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள், அறுவடையான நெல்லை விவசாயிகள் ஒப்படைக்க வரும் போது, அது காலாவதியாகி விட்டதாகக் கூறுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே கொள்முதல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் நெல்லை பாதுகாப்பாக வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: