தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்: ஆதீனத்துடன் முதலமைச்சர் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம் குறித்து விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார். 22-ம் தேதி வரை கால அவகாசம் உள்ளதால் ஆதீனத்துடன் முதலமைச்சர் பேசி விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என கூறினார். பல்லக்கில் தூக்க தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் தருமபுரம் ஆதினத்துடன் பேசி முதல்வர் முடிவெடுப்பார் என கூறினார். சிலர் தாங்கள் செய்த தவறுக்காக பல்லக்கில் தூக்க தடை விதித்ததை அரசியலாக்க பார்க்கிறார்கள் என கூறினார்.

எதிர்கட்சி தலைவர் கவன ஈர்ப்பு தீர்மானம்:

தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். பழம் பெருமை வாய்ந்த தருமபுரம் ஆதினத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டணப் பிரவேசம் நடைபெற்று வருகிறது. பல்லக்கு தூக்குபவர்கள் பாரம்பரியமாக ஆதீனத்திற்கு சொந்தமான இடத்திலயே வசித்து வருபவர்கள். தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம் பாரம்பரியமாக நடைபெற்று வரும் நிகழ்வு. பக்தர்கள் தங்கள் குருநாதரை பல்லக்கில் அமரவைத்து மனமுவந்து சுமந்து வருவது ஒரு ஆன்மிக நிகழ்வு என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Related Stories: