அறநிலைய துறைக்கு சொந்தமான ரூ.2.6 கோடி நிலம் மீட்பு

சென்னை: மதுராந்தகம் அடுத்த மங்கலம் ஊராட்சியில் புக்கத்துறை - உத்திரமேரூர் நெடுஞ்சாலையை ஒட்டி சுமார் 80 ஏக்கரில் தனியாருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதை வீட்டு மனையாக மாற்றி உள்ளனர். இந்த மனைகளுக்கு செல்லும் முக்கிய சாலை, அறநிலையத் துறைக்கு சொந்தமான ஸ்ரீ லட்சுமி நாராயணர் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், கோயில் நிலங்கள் வட்டாட்சியர் பிரபாகரன், கோயில் செயல் அலுவலர் மேகவண்ணன், ஆய்வாளர் ஜீவா மற்றும் போலீசார் நேற்று மேற்கண்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.  அதில், 87 சென்ட் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்டது தெரியவந்தது.  இதையடுத்து, தனியார் சார்பில் அமைக்கப்பட்ட சாலை, பொக்லைன் மூலம் அகற்றப்பட்டு, 87 சென்ட் நிலம் மீட்கப்பட்டு, அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு சுமார் ரூ.2.6 கோடி என கூறப்படுகிறது.

Related Stories: