நெடுஞ்சாலைத்துறையின் பவள விழாவையொட்டி சாலை பணியாளர், ஆய்வாளர்களையும் கவுரவிக்க வேண்டும்: அரசுக்கு சங்கங்கள் கோரிக்கை

சென்னை: நெடுஞ்சாலைத்துறையின் பவள விழாவையொட்டி சாலை பணியாளர், ஆய்வாளர்களையும் கவுரவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் பொது செயலாளர் மாரிமுத்து, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்கம் பொது செயலாளர் குருசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: நெடுஞ்சாலைத்துறையில் தலைமைப் பொறியாளர்கள் முதல் உதவிப் பொறியாளர்/இளநிலைப் பொறியாளர் என மொத்தம் சுமார் 2000 பேர் பொறியியல் பிரிவில் பணியில் உள்ளனர். இதர அனைத்து பிரிவு அலுவலர்கள் மற்றும் சாலை ஆய்வாளர், சாலைப்பணியாளர்கள் என மொத்தம் 23,000க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த துறையில் அனைவரின் ஒருங்கிணைப்போடுதான் வெள்ளி விழா, பொன்விழா மற்றும் பவள விழ என நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த 1ம் தேதி நெடுஞ்சாலைத்துறை சார்பாக நடைபெற்ற பவள விழாவில் 5 மூத்த பொறியாளர்களை மட்டுமே முதல்வர் நேரடியாக கவுரப்படுத்தியுள்ளார். இதுபோன்ற நிகழ்ச்சியில் இதர பணியாளர்களுக்கும் முதல்வரின் கரத்தால் சான்றிதழ் வழங்கி கவுரவப்படுத்தப்படும் என்று எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இதனால் இதர பணியாளர்கள் சோர்வு அடைந்துள்ளனர் என்பதை முதல்வரின் மேலான கவனத்திற்கு வருகின்றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: