சர்ச்சைக்குரிய சமஸ்கிருத உறுதிமொழியை ஆங்கிலத்தில் தான் படித்தோம்: மருத்துவ மாணவர்கள் பேட்டி

மதுரை: மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது. இது ெதாடர்பாக மதுரை மருத்துவக் கல்லூரியின் ஸ்டூடண்ட்ஸ் கவுன்சில் தலைவர் ஜோதீஷ் குமரவேல், துணைத்தலைவர் தீப்தா, பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியோர் நேற்று அளித்த பேட்டி: அவசரகோலத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியின் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்து விட்டோம். தேசிய மருத்துவ கல்லூரி இயக்குனரகம் இரு உறுதிமொழிகளில் எதை வேண்டுமானாலும் எடுக்கலாம் என கூறியிருந்த நிலையில் மாணவர் பேரவையினர் நாங்களே இந்த உறுதிமொழியை எடுத்தோம்.

கல்லூரி நிர்வாகத்திடம் இதுகுறித்து கேட்காமலேயே உறுதிமொழியை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஏற்றோம். இதற்கான முழுப்பொறுப்பும் எங்கள் மாணவ அமைப்பினையே சாரும். இவ்வாறு தெரிவித்தனர். பின்னர்   ஸ்டூடண்ட்ஸ் கவுன்சில் மாணவர்களை, மதுரை கலெக்டர் அனீஷ் சேகர் நேற்று விசாரணைக்கு அழைத்தார். கவுன்சில் தலைவர் ஜோதீஷ் குமரவேல் உள்ளிட்ட 4 மாணவர்களிடம் அவர் நடந்த சம்பவம் குறித்தும், இந்த உறுதிமொழி யாருடைய கட்டாயத்தின் பேரிலாவது ஏற்கப்பட்டதா, உண்மை காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடத்தினார்.

Related Stories: