இந்தி எழுத்து அழிப்பு போராட்டம் தி.க. தலைவர் கி.வீரமணி கைது

சென்னை:  , சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்து அழிப்பு போராட்டம் நேற்று நடந்தது. தி.க. தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.  

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்  முத்தரசன் பேரணியை தொடங்கி வைத்தார். அப்போது, கி.வீரமணி பேசுகையில், ‘‘கல்வித்துறை, ஆட்சித் துறையில் இந்தியை திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிராக இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இது ஒரு தொடர் போராட்டம். வெற்றி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும’’ என்றார்.

தொடர்ந்து, தி.க.வினர் ஈ.வி.கே.சம்பத் சாலை, ஈ.வெ.ரா.பெரியார் சாலை, காந்தி இர்வின் சாலை வழியாக பேரணியாக நடந்து எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி சென்றனர். அவர்களை தாளமுத்து நடராஜன் சிலை அருகே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் எழும்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில்  அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: