நாகை அருகே உத்தராபதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா.: தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

நாகை: திருமருகல் அருகே கோயில் திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாகை மாவட்டத்தில் திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக சப்பரம் வீதி உலா நடைபெற்றுவருகிறது.  உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில் தெருவடைத்தான் தேரோட்டம் இன்று நள்ளிரவு நடந்துள்ளது.

தேரானது தெற்கு வீதியில் திரும்பும் போது சக்கரத்தில் சிக்கி இளைஞர் தீபராஜன் என்பவர் இறந்துள்ளார். 60 அடி உயர சப்பரத்தின் சக்கரம் வயிற்றில் ஏறி இறங்கியதில் தொழிலாளி தீபராஜன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதாவது, தொழிலாளி தீபராஜன் சப்பரத்துக்கு முட்டுக்கட்டை போடும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சக்கரத்தில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 -ம் ஆண்டு விழா சில தினங்களுக்கு முன்னதாக வெகு விமரிசையாக நடைபெற்றது. அப்போது, தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தேர் மீது உரசியதில் மூன்று சிறுவர்கள், உட்பட  11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்திய முழுவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: