ஈரோட்டில் பாதாள சாக்கடை பணியின்போது பாறையை உடைக்க வைத்த வெடி வெடித்து 2 பேர் படுகாயம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன. இதில், வில்லரசம்பட்டி நால்ரோடு அருகே கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் 10 அடி ஆழத்தில் குழிதோண்டி, பாதாள சாக்கடை நீரை சேகரித்து அனுப்புவதற்கான தொட்டி அமைக்க குழியை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது.  பாறையை வெடி வைத்து தகர்க்க முடிவு செய்தனர். இதற்காக 6 வெடிகள் வைத்ததில் 4 வெடிகள் வெடித்தன.

2 வெடிகள் வெடிக்கவில்லை. அதை பரிசோதித்தபோது ஒயர் கட்டாகி இருப்பது தெரிய வந்துள்ளது. அதை இணைத்தபோது எதிர்பாராமல் வெடிகள் வெடித்து சிதறின. இதில் திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த சங்கர் (60), பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராமராஜ் (32) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: