கடந்த நிதியாண்டில் ரூ.1,152 கோடி லாபம் ஈட்டிய பாங்க் ஆப் மகாராஷ்டிரா

சென்னை: பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி, கடந்த நிதியாண்டில் ரூ.1,152 கோடி லாபம் ஈட்டியுள்ளது. புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் மகாராஷ்டிரா, மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த 4ம் காலாண்டு மற்றும் கடந்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் கூறியிருப்பதாவது: பாங்க் ஆப் மகாராஷ்டரிா வங்கி கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2021-22 நிதியாண்டில் ரூ.1,152 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 109.28 சதவீதம் அதிகம். இந்த வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.3,37,534 கோடியாக உள்ளது. இதில் டெபாசிட் ரூ.2,02,294 கோடியாகவும், கடன்கள் ரூ.1,35,240 கோடியாகவும் உள்ளது. நிகர வராக்கடன் 0.97 சதவீதமாக சரிந்துள்ளது. காசா 57.85 சதவீதமாக உள்ளது. இந்த வங்கி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விரைவில் 22 புதிய கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: