ரூ.1.86 கோடி வரி பாக்கி ஜிஎஸ்டி ஆணையரகம் இளையராஜாவுக்கு நோட்டீஸ்

சென்னை: சென்னையில் உள்ள ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திலிருந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில், சேவை வரி கட்டாததால், சேவை வரி ஏய்ப்பு தடுப்பு சட்டத்தின்படி, விசாரணைக்காக 2022 மார்ச் 10ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் என்றும், தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை உடன் எடுத்து வரும்படியும் குறிப்பிடப்பட்டது. இதை தொடர்ந்து ஜிஎஸ்டி புலனாய்வுத் துறையில் இருந்து மார்ச் 21ம் தேதி மீண்டும் இளையராஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதே காரணங்களை மீண்டும் குறிப்பிட்டு மார்ச் 28ம் தேதி இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது.

3 சம்மன்களுக்கும் இளையராஜா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காததால் அவருக்கு இறுதி நோட்டீஸை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். இளையராஜா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வரியோடு சேர்த்து கட்டணத்தை பெற்றுள்ளார். ஆனால் அந்த வரியை அவர் ஜிஎஸ்டி ஆணையத்திடம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மொத்தம் ரூ.1.86 கோடி அவர் செலுத்த வேண்டும்.

Related Stories: