சின்னதக்கேப்பள்ளியில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த சின்னதக்கேப்பள்ளியில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் மகாபாரத திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பெரியதக்கேப்பள்ளி, பெரியகோட்டப்பள்ளி, ஒண்டியூர், கீழ்கரடியூர், மேல்கரடியூர், கோரப்பனூர், கே.பூசாரிப்பட்டி, மாலகுப்பம், கள்ளக்குறி, போத்திநாயனப்பள்ளி, மாதிநாயனப்பள்ளி ஆகிய 12 கிராம மக்கள் இணைந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் கிருஷ்ணகிரி செல்வ விநாயகா நாடக கலைக்குழுவினரின் மகாபாரத தெருக்கூத்து நிகழ்ச்சியை, கடந்த 18 நாட்களாக நடத்தினர். இறுதி நாளான நேற்று முன்தினம் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திரவுபதி அம்மன் கோயில் எதிரே, சுமார் 30 அடி நீளத்திற்கு துரியோதனன் உருவ பொம்மை மண்ணால் உருவாக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தெருக்கூத்து கலைஞர்கள் சொற்பொழிவாற்றினர். இறுதியில் பீமனும், அர்ச்சுனனும் போரிடும் காட்சிகள் தத்ரூபமாக நடத்தப்பட்டு இறுதியில் அர்ச்சுனன் போர் வாலால் துரியோதனன் படுகளம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. 18 நாட்கள் நடந்த மகாபாரதம் திருவிழா நிறைவு பெற்றது. இப்படி 18 நாட்கள் மகாபாரதம் நடத்துவதின் மூலம், கிராமத்தில் உள்ள மக்களுக்கும், கால்நடைகளுக்கும் நோய் நொடிகள் நீங்கும், குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், மழை பொழியும், நன்மைகள் பிறக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

Related Stories: