'பிறமொழி படங்களை கண்டு கவலைப்பட வேண்டாம்; தமிழ் சினிமாவில் இளம் திறமையாளர்கள் உள்ளனர்': இயக்குநர் மணிரத்னம் பேச்சு

சென்னை: பிறமொழி படங்களின் வெற்றியை கண்டு தமிழ் சினிமா கவலைப்பட தேவையில்லை எனவும் தமிழ் சினிமாவில் உள்ள பல இளம் திறமையாளர்கள் புதிய கதவுகளை திறந்துள்ளனர் என்றும் இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளார். சினிமா தயாரிப்பு படங்களை மேற்பார்வையிட உதவும் தயாரிப்பு செலவுகளை குறைக்கும் பிரத்யேக மென்பொருள் தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இயக்குநர் மணிரத்னம், தயாரிப்பாளர் சக்தி ஜோதி தியாகராஜன், நடிகர் பிரசாந்த் ஆகியோர் ஹனி பிலிக்ஸ் என்ற அந்த மென்பொருள் பயன்பாட்டை தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் மணிரத்னம், பிறமொழி படங்கள் தமிழ்நாட்டில் ஓடுவது புதிது கிடையாது.

ஹாலிவுட் படங்களை தமிழில் டப் செய்து பார்க்கும் நாம், இப்போது கன்னட, தெலுங்கு சினிமாவை பார்க்கிறோம்; இது நல்லதுதான் என்றார். அதேவேளையில், தமிழ் சினிமாவை பற்றி கவலைப்பட தேவையில்லை; பல இளம் திறமையாளர்கள் உருவாகியிருப்பதாக மணிரத்னம் கூறினார். தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பட தயாரிப்புக்கான செலவை குறைக்கும் நிலையில், நடிகர்களின் சம்பளத்திற்கு அதிக தொகை செலவிடப்படுவதாகவும் மணிரத்னம் விமர்சித்தார்.

Related Stories: