வனப்பகுதியில் நீர் ஆதாரங்கள், தீவன உற்பத்தியை மேம்படுத்த ரூ.920 கோடியில் தமிழ்நாடு பசுமையாக்குதல் திட்டம்: அமைச்சர் ராமச்சந்திரன் அறிவிப்பு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசியதாவது: தமிழ்நாட்டின் புவியியல் பரப்பான 1,30,060 சதுர கிலோ மீட்டரில் வனப்பரப்பு 26,419.23 சதுர கிலோ மீட்டர், மரப்பரப்பு 4,424 சதுர கிலோ மீட்டர். வனம் மற்றும் மரப்பரப்பு 30,843.23 சதுர கிலோ மீட்டர். இது மாநிலத்தின் புவியியல் பரப்பில் 23.71 விழுக்காடு ஆகும். தமிழ்நாட்டில் 23,188.04 சதுர கிலோ மீட்டர் பகுதியில் உள்ள வனத்தில் 7124.457 சதுர கிலோ மீட்டர் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இது மொத்த வனப்பகுதியில் 30.72 விழுக்காடாகும். இது இந்திய நாட்டின் சராசரி அளவான 25 விழுக்காடை விட கூடுதலாக கொண்டு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

33 விழுக்காடு வனம் மற்றும் மரப்பரப்பு மிகவும் அவசியம். எனவே, முதலமைச்சர் 23.71 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையுடன், தமிழ்நாட்டில் முதன்முறையாக தமிழ்நாடு கிரீன் கிளைமேட் கம்பேனி என்ற அமைப்பு முதலைச்சரின் தலைமையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் 5 ஆண்டுகளில் 100 ஈரநிலங்களை கண்டறிந்து அவற்றின் இயற்கைச் சூழலை மீள உருவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். உயிர்ப் பன்மை பாதுகாப்பிற்காக ஜப்பான் - பன்னாட்டு கூட்டுறவு நிறுவன நிதியுதவியுடன் தமிழ்நாடு உயிரிப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம் II 2021-22 முதல் 2026-27 வரை ₹920.5 கோடியில் செயல்படுத்தபடும். தரம்குன்றிய வனப்பகுதிகளை மேம்படுத்த நபார்டு வங்கி உதவியுடன் 5 ஆண்டுகளில் செயல்படுத்த ₹481.148 கோடி ஒப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு நடப்பாண்டில் ₹143.69 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: