இந்தியா வந்தார் வில் ஸ்மித்: இஸ்கான் கோயிலில் வழிபாடு

சென்னை: பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கிங் ரிச்சர்ட் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். அதே விழாவில் தனது மனைவி குறித்து மோசமாக வர்ணித்த தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக்கை மேடையிலேயே கன்னத்தில் அறைந்தார். இதற்காக ஆஸ்கர் விழாக்களில் பங்கேற்க, ஆஸ்கர் அமைப்பு வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இந்தியா வந்தார் வில் ஸ்மித். அவருக்கு மும்பை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் இஸ்கான் கோயிலுக்கு சென்று வழிபட்டார். வில் ஸ்மித், கரண் ஜோஹர் தயாரிக்கும் ஸ்டூடன்ட் ஆஃப்தி இயர் படத்தின் மூன்றாம் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் அவர் இந்தியா, ஹாலிவுட் கூட்டு தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான முன் தயாரிப்பு பணிகளுக்காக அவர் இந்தியா வந்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: