செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு நடத்துவதற்கு பாராட்டு தெரிவித்த உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சன்!!

சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழ்நாடு நடத்துவதற்கு பாராட்டு தெரிவித்துள்ள உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சன், அந்த விளையாட்டு மீது கொண்டுள்ள மரியாதையே இவ்வளவு குறைந்த இடைவெளியில் ஏற்றதற்கு காரணம் என்று கூறியுள்ளார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. ரஷ்யாவில் நடைபெற இருந்த இந்த போட்டி உக்ரைன் மீதான படையெடுப்பால் தமிழ்நாட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.

சர்வதேச சம்மேளனம் கேட்டுக் கொண்ட மறு வினாடியே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதற்கு பச்சைக்கொடி காட்டினார். இதையடுத்து போட்டிக்கான ஏற்பாடுகள் தடல் புடலாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவது குறித்து உலகின் நம்பர் 1 வீரரான நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இவ்வளவு குறைந்த இடைவெளியில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை இந்தியா அதுவும் தமிழ்நாடு ஏற்று நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். செஸ் மீது தமிழ்நாடு கொண்டுள்ள மரியாதையே இதற்கு காரணம் என்றும் கார்ல்சன் பெருமிதம் தெரிவித்துள்ளார். மாமல்லபுரம் போட்டியில் தாமும் பங்கேற்கலாம் என்றும் அவர் வியூகம் தெரிவித்துள்ளார். இவர் 9 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் விஸ்வநாதன் ஆனந்தனை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது நினைவுகூறத்தக்கது.  

Related Stories: