மருத்துவ மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்: மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவு

சென்னை:  மருத்துவ முதுநிலை, இளநிலை மற்றும் செலிவிய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து  அனைத்து அரசு ஆஸ்பத்திரி டீன்களுக்கு மருத்துவ கல்வி இயக்குனரகம் அனுப்பி உள்ள உத்தரவு:

தமிழகம் முழுவதும் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருக்க வேண்டும். மேலும், அனைத்து சுகாதார பணியாளர்களும் முகக்கவசம் அணிய வேண்டும். விடுதியில் தங்கி மருத்துவம் மற்றும் செவிலியர் படிப்பு பயிலும் மாணவர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அதேபோல், ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நுழையும் அனைத்து நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா வார்டுகளை மறுகட்டமைப்பு செய்வதுடன், படுக்கைகள் , மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் வசதிகள், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும்.

மருத்துவக்கல்லூரி வளாகத்தில் பெரிய அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா மருத்துவ உபகரணங்களின் வேலை நிலையை புதுப்பிக்க வேண்டும். தடுப்பூசி முகாம்களின் செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை படிப்பு பயிலும் மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: