பொன்னமராவதி அருகே ஆர்.பாலகுறிச்சியில் கோயில் விழாவில் களைகட்டிய மஞ்சுவிரட்டு-மாடு முட்டி 10க்கும் மேற்பட்டோர் காயம்

பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே ஆர்.பாலகுறிச்சியில் மஞ்சுவிரட்டு நடந்தது. 600க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. மாடுபிடி வீரர்கள் காளைகளை ஆர்வமுடன் அடக்கினர்.பொன்னமராவதி அருகே ஆர்.பாலகுறிச்சி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு மஞ்சுவிரட்டு நேற்று நடந்தது.

இதில் தஞ்சை, சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஜல்லிகட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. சீறி பாய்ந்த காளைகளை இளைஞர்கள் ஆர்வமுடன் அடக்க முயன்றனர். வீரர்கள் பிடியில் சிக்காமல் சென்ற களைகளுக்கும் அடக்கிய வீரர்களை பாராட்டியும் பல்வேறு பரிசு வழங்கப்பட்டது. மேலும் மாடு முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் இந்த மஞ்சுவிரட்டினை கண்டுகளித்தனர்.

Related Stories: