கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: நாளை காலை சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை; ஆஜராக சம்மன்

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நாளை காலை 10 மணிக்கு சசிகலாவிடம் தனிப்படை போலீசார்  விசாரணை நடத்த  உள்ளனர். கோடநாட்டில் இருந்த சொத்துக்கள் மற்றும் காணாமல் போன பொருட்கள் குறித்தும் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017-ல் கொலை, கொள்ளை நடந்தது. கோடநாடு எஸ்டேட் காவலாளியை கொன்று அங்கிருந்த நகை, பணம், முக்கிய ஆவணங்கள் கொள்ளை போனதாக தகவல் வெளியானது.

5 ஆண்டுகளுக்கு பிறகு கோடநாடு வழக்கில் விசாரணை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சசிகலாவிடம் விசாரணை நடைபெற உள்ளது. முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதா முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் பலியானார். கோடநாடு எஸ்டேட்டில் ஆவணங்கள் எதுவும் கொள்ளையடிக்கப்பட்டதா என்ற கோணத்தில் நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி உள்ளிட்டோரிடம் ஏற்கனவே தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் நாளை காலை ஆஜராக வி.கே.சசிகலாவுக்கு நீலகிரி காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Related Stories: