சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் பள்ளி வேன் மோதி மாணவர் இறந்த விவகாரத்தில் சென்னை தனியார் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கல்வித்துறை பரிந்துரையின் பேரில் பள்ளி நிர்வாகம் 3 பேரையும் முதன்மை கல்வி அதிகாரி பணிநீக்கம் செய்ததுள்ளார். பள்ளி முதல்வர் தனலட்சுமி, போக்குவரத்துக்கு குழுவில் இருந்த 2 உறுப்பினர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கடந்த மாதம் வளசரவாக்கத்தில் ஆழ்வார்திருநகரில் உள்ள பள்ளியில் வேன் மோதி 2-ம் வகுப்பு மாணவன் தீக்க்ஷித் உயிரிழந்தார். தனியார் பள்ளிக்கு நேரில் வந்த மாவட்ட கல்வி அதிகாரி மார்க்ஸ், அம்பத்தூர் வருவாய்த் துறை அதிகாரி இளங்கோ, காவல் துணை ஆணையர் மீனா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.