அன்னவாசலில் திமுக சார்பில் குதிரை வண்டி பந்தயம்

விராலிமலை : அன்னவாசலில் தி.மு.க.சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் நிகழ்வாக முதன் முறையாக குதிரை வண்டி பந்தயம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. காலையில் 10.50 மணிக்கு தொடங்கிய பந்தயத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் இரண்டு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. பெரிய குதிரை வண்டிகளுக்கு 10 கிமீ, சிறிய குதிரை வண்டிகளுக்கு 8கிமீ தூரம் என நிர்ணயிக்கப்பட்டது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், காரைக்கால், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து பெரிய குதிரை வண்டி பிரிவில் 10, சிறிய குதிரை வண்டி பிரிவில் 16 என மொத்தம் 26 வண்டிகள் பங்கேற்றன.

இதில் பெரிய குதிரை வண்டி பிரிவில் முதல் பரிசான ரூ.25,069ஐ அன்னவாசல் ஜெகநாதன் குதிரையும், இரண்டாம் பரிசை ரூ.20,069ஐ புதுக்கோட்டை சுதர்சனும், மூன்றாம் பரிசான 15 ஆயிரத்தி 69 ஐ சேலம் குள்ளம்பட்டி மணிவேலும், நான்காவது பரிசான 10 ஆயிரத்தி 69 ஐ அன்னவாசல் சந்திரன் குதிரைக்கும் முறையே வழங்கப்பட்டது.

சிறிய குதிரை வண்டி பிரிவில் முதல் பரிசான 15 ஆயிரத்தி 69 ஜிப்ஸி சரவணனுக்கும், இரண்டாம் பரிசான 12 ஆயிரத்தி 69 திருச்சி உறையூர் வெக்காளிக்கும், மூன்றாம் பரிசான 10 ஆயிரத்தி 69 புதுக்கோட்டை செல்லப்பாண்டியனுக்கும், நான்காவது பரிசான 8 ஆயிரத்தி 69 அன்னவாசல் ஜெகநாதன் குதிரை வண்டியும் பெற்றது.மேலும் சிறந்த குதிரை மற்றும் வண்டிகளை லாவகமாக ஓட்டி பார்வையாளர்களை கவர்ந்தவர்களுக்கு சிறப்பு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கூடி நின்று ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர்.

Related Stories: