3 தேவைகளை நிறைவேற்றினால் கிராம மக்கள் நகரங்களை நோக்கி செல்வதை தடுக்கலாம்: துணை ஜனாதிபதி யோசனை

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசுகையில்,‘‘கிராமபுறங்களில் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கொடுத்தால் அவர்கள் நகரங்களுக்கு செல்வது தடுக்கப்படும். இந்தியாவில் மொத்தம் 2.78 லட்சம் உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. உலகிலேயே இந்த அளவு எண்ணிக்கையில் உள்ளாட்சி அமைப்புகள் வேறு எந்த நாட்டிலும் இருக்காது. பெண்களுக்கு சம அதிகாரம் வழங்குவது இந்திய பண்பாட்டுக்கு எதிரானது என்று கூறக்கூடாது. பெரிய ஆறுகளுக்கு பெண்கள் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதுதில் தயக்கம் காட்டுவது தவறு ஆகும்’’ என்றார்.

Related Stories: