கலைஞரால் ஆரம்பிக்கப்பட்ட பெரம்பலூர் மருத்துவக் கல்லூரி 10 ஆண்டாக கிடப்பில் உள்ளது: திமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு-அமைச்சர் பதில்

கேள்வி நேரத்தின் போது பெரம்பலூர் தொகுதி எம்எல்ஏ ம.பிரபாகரன் (திமுக) பேசுகையில், பெரம்பலூர் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம். கலைஞரால் 2011ம் ஆண்டு  ஆரம்பிக்கப்பட்ட அந்த மருத்துவ கல்லூரி கடந்த 10 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. அந்த மருத்துவ கல்லூரிக்கான இடத்தை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா, ஆண்டிமுத்து சின்னபிள்ளை அறக்கட்டளை மூலமாக வழங்கியிருக்கிறார்” என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் எங்களை டெல்லியில் ஒன்றிய அமைச்சரை சந்தித்து இது சம்பந்தமான கோரிக்கையை விடுக்க செய்தார். அந்தவகையில் பெரம்பலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைய வேண்டியதன் அவசியத்தை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியிருக்கிறோம். நிச்சயம் வரும் என்று எதிர்பார்த்தும் இருக்கிறோம்.

Related Stories: