டிடிவி தினகரன், நடிகர் செந்தில் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து.: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: டிடிவி தினகரன், நடிகர் செந்தில் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. முன்னதாக டிடிவி தினகரன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் பொறுப்பில் இருந்து பலரை நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்.

அதாவது,  அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து கோகுல இந்திராவை நீக்கிவிட்டு, அந்த பொறுப்பில் நடிகர் செந்திலை நியமனம் செய்தார். அதேபோல் இளைஞர்கள் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அதிமுக எம்பி.ப.குமார் நீக்கப்பட்டார். அதன் பின்னர் தனியார் தொலைக்காட்சிகளில்  நடிகர் செந்தில் பேட்டி ஒன்றை அளித்தார். அதில் ஆபாசமாகவும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக எம்.பி. ப.குமார், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரில் டிடிவி தினகரன் தூண்டுதல் பெயரில் நடிகர் செந்தில் பேசியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் டிடிவி தினகரன், நடிகர் செந்தில் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, தற்போதுவரை அந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்தநிலையில், இன்று விசாரணைக்கு வந்த போது 2017ல் திருச்சி மத்திய குற்றப்பிரிவால் டிடிவி தினகரன், நடிகர் செந்தில் மீது பதிவு செய்யப்பட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Related Stories: