எதெல்லாம் அறிவிக்கப்பட்டதோ அதை எல்லாம் முடிப்போம் புதிதாக கட்டிடம் கட்ட சிந்தித்துதான் பண்ணுவோம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது நன்னிலம் எம்எல்ஏ இரா.காமராஜ் (அதிமுக) எழுப்பிய கேள்விக்கு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்து பேசியதாவது: புதிய கட்டிடங்கள் கட்டி கொடுக்க வேண்டும் என்று கேள்விகள் வரும் பட்சத்தில் சில கருத்துகளை நான் இங்கு பதிவு செய்து கொள்கிறேன். நிதித்துறை என்பது எல்லா துறையிலும் செலவை கட்டுப்படுத்துகிற துறை. ஏற்கனவே முழுமையாக கணினி மயமாக்கப்பட்ட சூழ்நிலையில், திட்டம் தீட்டுவது இந்த அரசின் இலக்காக கொண்டுள்ளது. அதற்கு ஏற்ப தான் செயல்பட்டு வருகிறோம். தற்போது சட்டப்பேரவை கட்டிடம் 100 ஆண்டுகளுக்கு மேலாகியும் சிறப்பாக உள்ளது. ஆனால் பல இடங்களில் 30, 40 ஆண்டுகளில் கட்டிடம் பாழடைந்து போகிறது.

திருப்பி கட்ட வேண்டிய நிலை உள்ளது. கட்டுவது சுலபம், பராமரிப்பது கஷ்டம் என்ற வகையில் திரும்ப திரும்ப பிரச்னை வருகிறது. அதற்கு மேலே ஒரு பிரச்னை. சராசரி 35, 40 சதவீதம் பணி இடங்கள் காலியாக இருக்கிறது. பெரிய மாவட்டங்களில் 100 சதவீதம் இடங்கள் முழுமையாக உள்ளது. அங்கு பணியாற்றுவது ரொம்ப சுலபம். புறநகர் பகுதியில், ரிமோட் ஏரியாக்களில் யாரும் பணியாற்ற போவதில்லை. கட்டிடம் கட்டினாலும் அங்கு அலுவலர்கள் பணிபுரியும் கட்டிடமாக இருக்க வேண்டும். எனவே முடிந்த அளவுக்கு இண்டர்நெட் மூலமாகவும், இல்லையென்றால் வீடை தேடி கொண்டு போய் திட்டத்தை கொடுக்கின்ற பணியை நாங்களாகவோ அல்லது வங்கிகளுடன் இணைந்தோ எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம். எனவே, நிலுவையில் இருக்கிற பணியை நிறுத்த மாட்டோம். எது எல்லாம் திட்டமிடப்பட்டதோ, எதெல்லாம் அறிவிக்கப்பட்டதோ அதை எல்லாம் முடிப்போம். ஆனால், புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு சிந்தித்து தான் பண்ணுவோம்.

Related Stories: