கூவம் ஆற்றை சீரமைக்க நீர்வளத்துறைக்கு ரூ.93 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அடையாறு சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை நிதியுதவியின் கீழ் 56 குறுகிய கால உபதிட்டங்களில் 7 துறைகளின் மூலம் அடையாறு ஆற்றின் தொடக்கம் முதல் முகத்துவாரம் வரை ரூ.555.46 கோடி மதிப்பிலான சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒருங்கிணைந்த கூவம் ஆறு சூழலியல் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.604.77 கோடி மதிப்பீட்டில் சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியுதவியுடன் 60 குறுகிய கால உபத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பருத்திப்பட்டு அணைக்கட்டு முதல் ஆறு கடலில் கலக்கும் இடம் வரை சுமார் 27 கி.மீ நீளத்திற்கு கூவம் ஆற்றினை 7 நிலைகளில் சீரமைக்க ரூ.93 கோடி நீர்வளத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: